உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  எஸ்.ஐ.யுடன் பா.ஜ.வினர் வாக்குவாதம் சுந்தராபுரத்தில் பரபரப்பு

 எஸ்.ஐ.யுடன் பா.ஜ.வினர் வாக்குவாதம் சுந்தராபுரத்தில் பரபரப்பு

போத்தனூர்: மலுமிச்சம்பட்டியில், கோவை தெற்கு மாவட்ட பா.ஜ. சார்பில் கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்கும் மாநாடு நேற்று நடந்தது. இதற்காக நேற்று அதிகாலை கோவை -- பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில், குறிச்சி பிரிவு ரவுண்டானா முதல் சுந்தராபுரம் நான்கு சாலை சந்திப்பு வரை, கொடி கட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். போலீசார் கொடிகளை அகற்ற வைத்தனர். இத்தகவல் தெற்கு மாவட்ட தலைவர் சந்திரசேகர், முன்னாள் தலைவர் வசந்த ராஜன் ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டது. காலை, 10:30 மணியளவில் மாவட்ட தலைவர் சந்திரசேகர், முன்னாள் தலைவர் வசந்தராஜன் மற்றும் நிர்வாகிகள் சுந்தராபுரம் சந்திப்பிற்கு வந்தனர். போலீஸ் எஸ்.ஐ. சிலம்பரசனிடம், சந்திரசேகர் கொடிகளை அகற்றியது குறித்து கேட்ட போது, கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 'முடிந்தால் பாருங்கள், ஒவ்வொருவரிடமும் அனுமதிக்காக காத்திருக்க முடியாது. நாங்கள் கொடியை கட்டுவோம்' என சந்திரசேகர் கூறியதும், சாலையின் மையத்தடுப்பில் கொடி கள் கட்டப்பட்டன. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் மாமூல் வாங்கிக்கொண்டு, பார்களில் 24 மணி நேரமும் மது விற்க அனுமதிக்கின்றனர் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை கட்சியினர் கூறினர். அவர்களை வசந்தராஜன் சமாதானப்படுத்தினார். தலைவர் சந்திரசேகர் கூறுகையில், மாநகர் பகுதியில் கொடி கட்ட, போலீஸ் கமிஷனரிடம் அனுமதி கேட்டோம்; கொடுத்துவிட்டார். சுந்தராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணையனிடம் இரு நாட்களாக கேட்டும் தரவில்லை. இதுவே பிரச்னைக்கு காரணம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ