உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மத்திய அரசின் சாதனைகள் வீடுதோறும் பா.ஜ. பிரசாரம்

 மத்திய அரசின் சாதனைகள் வீடுதோறும் பா.ஜ. பிரசாரம்

கருமத்தம்பட்டி, மத்திய அரசின் சாதனைகளை வீடு, வீடாக பிரசாரம் செய்ய, பா.ஜ., பொருளாதார பிரிவு நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., பொருளாதார பிரிவு நிர்வாகிகள் கூட்டம், மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமையில் வாகராயம் பாளையத்தில் நடந்தது. மத்திய அரசின் நடவடிக்கைகளால், நாட்டின் பொருளாதாரம் வளரச்சி அடைந்து வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் வரி விதிப்பை திறமையாக கையாண்டு வரும் மத்திய அரசு, பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை முனைப்புடன் எடுத்து வருகிறது. அதற்கு நாட்டு மக்கள் துணை நிற்க வேண்டும், என, நிர்வாகிகள் பேசினர். ஒன்றிய வாரியாக, நிர்வாகிகள் நியமிப்பது, மத்திய அரசின் சாதனைகளை வீடு, வீடாக சென்று பிரசாரம் செய்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் திருவுருவ படத்துக்கு, நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதேபோல், பா.ஜ. ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் ராஜேஷ் தலைமையில், கார்த்திகை தீபம் ஏற்றி, வாஜ்பாய் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ