உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பிளேக் மாரியம்மன் கோவில் திருவிழா

பிளேக் மாரியம்மன் கோவில் திருவிழா

நெகமம் : நெகமம் பிளேக் மாரியம்மன் கோவில் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.கிணத்துக்கடவு அருகே நெகமம் பகுதியில் பல்வேறு சிறப்பு வாய்ந்த கோவில்கள் உள்ளன. நெகமம் கோப்பனூர்புதூர் பிளேக் மாரியம்மன் கோவில் உள்ளது.இக்கோவிலில், கடந்த 15ம் தேதி, நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா துவங்கியது. 19ம் தேதி, கம்பம் எடுத்து வந்து கங்கையில் விடப்பட்டது. தொடர்ந்து, மூத்த பிள்ளையார் வேள்வி வழிபாடு, காப்பணிவித்தல், பேரொளி வழிபாடு, கம்பம் மற்றும் பூவோடு எடுத்தல் நடந்தது.கடந்த, 22ம் தேதி, கங்கையில் இருந்து சக்தி கலசம் அழைத்து வருதல், அம்மனுக்கு ஆபரணங்கள் கொண்டு வரும் நிகழ்வு நடந்தது. 23ம் தேதி, சுவாமிக்கு அலங்கார பூஜை, மலர் அர்ச்சனை, பேரொளி வழிபாடு, மாவிளக்கு, பொங்கல் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் அம்மனை வேண்டி பூவோடு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கோவிலில் இருந்து கம்பம் எடுத்து கொண்டு கங்கையில் விடப்பட்டது.கடந்த, 24ம் தேதி, அம்மன் திருவீதி உலா, மஞ்சள் நீராடுதல், 25ம் தேதி, சுவாமிக்கு மகா அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தது. பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து திருமுறை விண்ணப்பம், பிரசாதம் வழங்கும் நிகழ்சிகள் நடந்தது. இந்நிகழ்ச்சிகளில், நெகமம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை