ரத்ததான முகாம்
பெ.நா.பாளையம் : சேவா பாரதி மற்றும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை ஆகியவை இணைந்து, பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள டாக்டர் கிருஷ்ணானந்தம் மருத்துவமனையில் ரத்த தானம் முகாமை நடத்தியது. முகாமை, சேவாபாரதி கோட்ட தலைவர் சத்ய நாராயணன் துவக்கி வைத்தார். சேவா பாரதியின் நிர்வாகிகள் முரளிதரன், கெங்கராஜா, முத்துப்பாண்டி, பத்மராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், 50 யூனிட் ரத்தம் பெறப்பட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள், சேவா பாரதி ஆன்மீக பேச்சாளர் மனோகரன் தலைமையில் செய்யப்பட்டு இருந்தது.