உள்ளூர் செய்திகள்

ரத்த தான முகாம்

நெகமம்; நெகமம், மெட்டுவாவியில் உள்ள தனியார் கம்பெனியில், ரத்த தான முகாம் நடந்தது. மாவட்ட சுகாதாரத் துறை சார்பில், சுகாதார அலுவலர் பாலுசாமி அறிவுறுத்தல் படி நெகமம், மெட்டுவாவியில் உள்ள தனியார் கம்பெனியில், நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை ரத்த வங்கி சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. இதில், தனியார் கம்பெனி பணியாளர்கள் பலர் மொத்தமாக, 100 யூனிட் ரத்த தானம் வழங்கினர். முகாமில், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை