உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குண்டுவெடிப்பு கைதிகள் வழக்கு ஒத்திவைப்பு

குண்டுவெடிப்பு கைதிகள் வழக்கு ஒத்திவைப்பு

கோவை; பெங்களூரு குண்டுவெடிப்பு கைதிகள் மீதான விசாரணை, வரும் 21க்கு ஒத்திவைக்கப்பட்டது. கோவை, கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ஹிதயத்துல்லா என்பவரை பணத்திற்காக ஒரு கும்பல் கடத்த திட்டமிட்டது தெரிய வந்தது. போலீசார் விசாரணையில், கர்நாடக மாநிலம், பெங்களூரு பா.ஜ.,அலுவலகம் அருகில் கடந்த 2013 ஏப்ரல் 17 ல் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய கோவை, கரும்புக்கடை பகுதியை சேர்ந்த கிச்சான்புகாரி, அஸ்ரப் அலி, ஜுல்பிகர் அலி உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது, கோவை ஜே.எம்:5, கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிச்சான்புகாரி, அஸ்ரப் அலி, ஜுல்பிகர் அலி ஆகியோர் , பெங்களூரு சிறையில் இருந்தபடி காணொலியில் ஆஜர்படுத்தப்பட்டனர். மற்ற ஒன்பது பேர் நேரில் ஆஜரானதை தொடர்ந்து, ஆக. 21 க்கு, வழக்கை ஒத்திவைத்து மாஜிஸ்திரேட் வெர்ஜின் வெர்ஸ்டா உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை