உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / திறந்தவெளி கழிப்பிடம்; பேரூராட்சி எச்சரிக்கை

திறந்தவெளி கழிப்பிடம்; பேரூராட்சி எச்சரிக்கை

பெ.நா.பாளையம்; திறந்தவெளி பகுதிகளை கழிப்பிடமாக பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என, நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில், 15 வார்டுகள் உள்ளன. இங்கு, பொதுமக்கள் திறந்தவெளி பகுதிகளை கழிப்பிடமாக பயன்படுத்தக் கூடாது என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. திறந்தவெளி பகுதிகளை கழிப்பிடமாக பயன்படுத்தினால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, பொதுமக்கள், பொது கழிப்பிடத்தையோ அல்லது தனிநபர் கழிப்பிடத்தையோ பயன்படுத்த வேண்டும். இதை பயன்படுத்தாமல் திறந்தவெளி பகுதிகளை கழிப்பிடமாக பயன்படுத்தி, சிறுநீர் கழித்தால், 100 ரூபாயும், மலம் கழித்தால், 200 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும். இது தொடர்பாக ஒவ்வொரு வார்டும் கண்காணிக்கப்பட்டு வருகிறது என, நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை