உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தெரு நாய் கடித்து சிறுவன் படுகாயம்

தெரு நாய் கடித்து சிறுவன் படுகாயம்

பாலக்காடு: பாலக்காடு அருகே, தெரு நாய் கடித்து இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் படுகாயமடைந்தார். கேரள மாநிலம், பாலக்காடு மேபரம்பு மாப்பிளக்காடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் - சவுமியா தம்பதியரின் மகன் தியான். அப்பகுதியில் உள்ள அரசு நடுநிலை பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கிறார். இந்நிலையில், நேற்று காலை தியான் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த தெரு நாய் திடீரென ஓடிவந்து அவரை கடித்தது. முகம், முதுகு பகுதியில் படுகாயமடைந்த சிறுவனை, அப்பகுதி மக்கள் மீட்டு திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள சிறுவனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி