உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கரிவரதராஜ பெருமாள் கோவிலில் இன்று பிரம்மோத்ஸவ விழா

கரிவரதராஜ பெருமாள் கோவிலில் இன்று பிரம்மோத்ஸவ விழா

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள பூமி நீளாபெருந்தேவி நாயகி சமேத கரி வரதராஜ பெருமாள் திருக்கோவிலில், 20ம் ஆண்டு பிரம்மோத்ஸவ விழா, இன்று துவங்குகிறது.இன்று காலை, 10:30 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. மாலை அன்ன வாகனத்தில் பெருமாள் திருவீதி உலா நடக்கிறது. நாளை மாலை, 6:00 மணிக்கு சிம்ம வாகனத்தில் யோக நரசிம்மர் அலங்காரத்தில், பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.8ம் தேதி முத்து பந்தல், முத்தங்கி அலங்காரத்திலும், 9ம் தேதி அனுமந்த வாகனத்தில் ஸ்ரீராமர் அலங்காரத்திலும், 10ம் தேதி கருட வாகனத்திலும், 11ம் தேதி மாலை திருக்கல்யாண உற்சவம், தொடர்ந்து யானை வாகன நிகழ்ச்சி நடக்கிறது.14ம் தேதி மாலை சேஷ வாகனத்தில், வைகுண்ட நாதன் அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளுகிறார். விழாவை ஒட்டி பத்து நாட்களும், திவ்ய பிரபந்த சேவா காலம் தினமும் மதியம், 2:00 மணி முதல், 6:00 மணி வரை கோவில் வளாகத்தில் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ