கிளை கால்வாய் சேதம்; சீரமைக்க வலியுறுத்தல்
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவுக்கு உட்பட்ட வடசித்தூர் முதல் செட்டியக்காபாளையம் வரை உள்ள பி.ஏ.பி., கிளை கால்வாய் வழித்தடத்தில் உள்ள ஏராளமான விளை நிலங்களுக்கு தண்ணீர் வசதி கிடைக்கிறது. இதில், கோதவாடியில் உள்ள 20வது மடை அருகே கால்வாய் சேதமடைந்துள்ளது. இதனால், பி.ஏ.பி., தண்ணீர் வீணாகிறது. விளை நிலத்துக்கு போதிய அளவு தண்ணீர் வசதி கிடைப்பதில்லை. எனவே, பி.ஏ.பி., அதிகாரிகள் சேதமடைந்த கால்வாய் பகுதியினை ஆய்வு செய்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.