மேலும் செய்திகள்
உண்டியல் திருட்டு
15-Sep-2024
வடவள்ளி: பொங்காளியூரில் உள்ள தண்டு மாரியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.கோவை மாநகராட்சிக்குட்பட்ட, 39வது வார்டு, வீரகேரளம் அடுத்த பொங்காளியூரில் தண்டு மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று காலை வழக்கம் போல, அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், சுவாமி தரிசனம் செய்ய சென்றுள்ளனர்.அப்போது, கோவில் வளாகத்தில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததை, கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உண்டியல் உடைத்து, பணம் திருடி சென்றது குறித்து வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.போலீசார், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், நள்ளிரவில் கோவிலுக்கு வந்த, 4 மர்ம நபர்கள், உண்டியலை உடைத்து திருடி செல்வது தெரியவந்தது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
15-Sep-2024