உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சர்வீஸ் ரோட்டோரத்தில் உடைந்து கிடக்கும் தடுப்புகள்

சர்வீஸ் ரோட்டோரத்தில் உடைந்து கிடக்கும் தடுப்புகள்

கிணத்துக்கடவு: பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. இதில், வாகன விபத்தை தடுக்கும் வகையில் 'யு டேர்ன்' பகுதிகளில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், ஒரு சில பகுதிகளில் உள்ள 'யு டேர்ன்'களில் தடுப்புகள் இன்றி காணப்படுவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மேலும், இங்கு வைக்கப்பட வேண்டிய தடுப்புகள் அனைத்தும், உடைந்த நிலையில், சிங்கராம்பாளையம் பிரிவு அருகே சர்வீஸ் ரோட்டோரத்தில் குப்பை போன்று கிடப்பில் போடப்பட்டுள்ளது. இவற்றை சீரமைத்து, விபத்து நடக்கும் இடங்களில் வைக்க வேண்டும். மேலும், புது பஸ் ஸ்டாண்ட் முன்பாக உள்ள தடுப்பு சேதமடைந்து காணப்படுகிறது. பலமாக காற்றடித்தால் சாயும் நிலையில் உள்ளது. இதை போலீசார் கவனித்து உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும் என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை