பி.எஸ்.சி., - சி.எஸ்.,க்கு ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்
கோவை; பிஷப் அம்புரோஸ் கல்லுாரியில் நடந்த விளையாட்டு விழாவில், பி.எஸ்.சி., சி.எஸ்., ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் வென்றது.பிஷப் அம்புரோஸ் கல்லுாரியில், 25வது விளையாட்டு விழா நடந்தது. இதில், வாலிபால், ஹேண்ட்பால், கால்பந்து, கபடி, பேட்மின்டன், கேரம், 100 மீ., 200 மீ., 400 மீ., 800 மீ., 1,500 மீ., குண்டு எறிதல், தட்டு எறிதல், வட்டு எறிதல், மும்முறை தாண்டுதல், 400 மீ., தொடர் ஓட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.போட்டிகளின் நிறைவில், தனி நபர் சாம்பியன்ஷிப் பட்டத்தை, பி.காம்., சி.எஸ்., மூன்றாம் ஆண்டு மாணவர் அபிஷேக், பி.காம்., முதலாமாண்டு மாணவர் கார்த்திகேயன் ஆகியோரும், மாணவியர் பிரிவில், பி.காம்., சி.ஏ., மூன்றாமாண்டு மாணவி ஆர்த்தியும் வென்றார்.ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை, பி.எஸ்.சி., சி.எஸ்., அணி வென்றது. இரண்டாம் இடத்தை பி.காம்., சி.ஏ., அணி பிடித்தது.வெற்றிபெற்ற அணிகளுக்கு, ஓய்வுபெற்ற சி.ஆர்.பி.எப்., ஐ.ஜி.பி., அஜய் பரதன், கல்லுாரி செயலாளர் ஜெராம், முதல்வர் பீட்டர் ராஜ் ஆகியோர் பரிசு வழங்கினர். உடற்கல்வி இயக்குனர் வேணுகோபால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.