மேலும் செய்திகள்
அரசு மருத்துவமனையில் சிறப்பு பல் சிகிச்சை பிரிவு
19-Jun-2025
கோவை; ராமநாதபுரத்தில் செயல்பட்டு வரும், கோவை ஹார்ட் பவுண்டேஷன் மருத்துவமனையின் புதிய மருத்துவமனை, எல் அண்ட் டி பைபாஸ், இருகூரில் நாளை துவங்கப்படவுள்ளது.புக்ரா என்ற இந்த புதிய பல்துறை சிறப்பு மருத்துவமனையை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைக்கிறார்.இது, உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சேவையை வழங்கவுள்ள, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாகும். அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் அனுபவம் வாய்ந்த டாக்டர்கள் வாயிலாக, சிறந்த சிகிச்சை வழங்கப்படவுள்ளது.150 படுக்கை வசதிகள், பிசியோதெரபி, மாஸ்டர் ஹெல்த் செக்கப், அதி நவீன ஆய்வுக்கூடங்கள் மற்றும் அறுவை சிகிச்சை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 24 மணி நேர அவசர மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு, இருதய சிகிச்சை , எலும்பு முறிவு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவம், உயர்தர கருத்தரித்தல் மையம், பொது மருத்துவம் மற்றும் சர்க்கரை நோய் என, பல்துறை சிகிச்சைகளும் வழங்கப்படவுள்ளன.
19-Jun-2025