உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பஸ், லாரி இடையே உரசல்; போக்குவரத்து பாதிப்பு

பஸ், லாரி இடையே உரசல்; போக்குவரத்து பாதிப்பு

நெகமம்; நெகமம், தேவணாம்பாளையத்தில் ரோட்டில் தனியார் பஸ் மற்றும் லாரி உரசி நின்றதால், பயணியர் அவதிப்பட்டனர்.நெகமம் அருகே உள்ள, செட்டியக்காபாளையத்தில் இருந்து, பொள்ளாச்சி நோக்கி சென்ற தனியார் பஸ்சும், நெகமம் பகுதியில் இருந்து வந்த லாரியும், தேவணாம்பாளையம் நீரோடை அருகே, ரோட்டை கடக்கும் போது ஒன்றோடு ஒன்று உரசி நடுவழியில் நின்றன.இதனால், லாரி மற்றும் பஸ் டிரைவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு மணி நேரத்துக்கு மேலாக பஸ் மற்றும் லாரியை எடுக்காமல் ரோட்டிலேயே நிறுத்தினர். இதனால், பஸ்சில் அமர்ந்திருந்த பயணியர் பாதிக்கப்பட்டனர். இறுதியில், அப்பகுதி மக்கள் பஸ் மற்றும் லாரி டிரைவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை