உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பஸ் ஸ்டாப் ஆக்கிரமிப்பு

பஸ் ஸ்டாப் ஆக்கிரமிப்பு

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, சிங்கையன்புதூர் பஸ் ஸ்டாப் பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.கிணத்துக்கடவு, சிங்கையன்புதூரில் இருந்து நாள்தோறும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் என ஏராளமானோர் பஸ் வாயிலாக பயணிக்கின்றனர்.ஆனால், இங்கு உள்ள பஸ் ஸ்டாப் பகுதியில் மரக்கட்டைகள், செங்கல் மற்றும் ஹாலோபிளாக் கற்கள் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் கிடப்பதால், மக்கள் இங்கு நிக்க சிரமப்பட்டு ரோட்டில் நின்று பஸ் ஏறி செல்கின்றனர்.எனவே, மக்கள் நலன் கருதி, பஸ் ஸ்டாப் பகுதியில் உள்ள கட்டுமான பொருட்களை அகற்றி, சுத்தமாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என, வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ