உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சி டிவிஷன் கால்பந்து  போட்டி ஏ.ஜே.கே., - காட்டூர் வெற்றி 

சி டிவிஷன் கால்பந்து  போட்டி ஏ.ஜே.கே., - காட்டூர் வெற்றி 

கோவை;மாவட்ட அளவிலான 'சி' டிவிஷன் கால்பந்து லீக் போட்டியில் ஏ.ஜே.கே., ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் காட்டூர் ரீகிரியேஷன் அணிகள் வெற்றி பெற்றன.கோவை மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான கால்பந்து லீக் போட்டி, நவக்கரை ஏ.ஜே.கே., கலை அறிவியல் கல்லுாரியில் நடக்கிறது. நேற்று முன்தினம் மாலை நடந்த முதல் லீக் போட்டியில் ஏ.ஜே.கே., ஸ்ட்ரைக்கர்ஸ் அணி, 1 - 0 என்ற கோல் கணக்கில் நெய்விலை எப்.சி., அணியை வீழ்த்தியது. ஏ.ஜே.கே., அணியின் சித்தார்த் 25வது நிமிடத்தில் கோல் அடித்து, அணியின் வெற்றிக்கு உதவினார். மற்றொரு போட்டியில், காட்டூர் ரீகிரியேஷன் கிளப் அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் இந்து முஸ்லிம் கால்பந்து கிளப் அணியை வீழ்த்தியது. காட்டூர் அணியின் யஷ்வந்த் 57வது நிமிடத்தில் கோல் அடித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !