உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கொப்பரைக்கு அதிக விலை வேண்டும்

கொப்பரைக்கு அதிக விலை வேண்டும்

கோவை;கோவையில் உழவர் நலத்துறை சார்பில், விவசாயிகள் கருத்துக்கேட்பு கூட்டம், வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில் நடந்தது.இந்த கூட்டத்தில் கோவை, காரமடை, தொண்டாமுத்துார், பொள்ளாச்சி வட்டாரங்களை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர். வாழை சூறாவளி காற்றினால் பாதிக்கப்படும் போது, பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு, இழப்பீடு வழங்க வேண்டும், பாக்கு பயிரிட மானியம் வழங்க வேண்டும், வன விலங்குகளின் தாக்குதலால் ஏற்படும் பயிர் சேதத்திற்கு இழப்பீடு அதிகரித்து வழங்க வேண்டும், தென்னை- கொப்பரைக்கு விலை உயர்த்தி வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை நிறைவேற்ற, விவசாயிகள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி