உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கணினி ஆசிரியர் பணி விண்ணப்பிக்க அழைப்பு

கணினி ஆசிரியர் பணி விண்ணப்பிக்க அழைப்பு

கோவை,: கோவை மாவட்ட கலெக்டர் அறிக்கை:மேட்டுப்பாளையம் வெல்ஸ்புரம் அரசு ஆதி திராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்களின் நலன் கருதி, அப்பள்ளியில் உள்ள கணினி ஆசிரியர் பணியிடத்தை தற்காலிக ஆசிரியர் நியமன அடிப்படையில் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கு மாதம், 15 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கப்படும். பள்ளி மேலாண்மைக்குழு மூலம் நியமனம் செய்யப்படும். விண்ணப்பங்கள் நேரடியாகவோ, தபால் வாயிலாகவோ உரிய கல்வி சான்றுகளுடன் கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில், வரும் 24 முதல் 26ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை