உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / யோகா பயிற்சியாளர் தேர்வு: ஆர்வமுள்ளோருக்கு அழைப்பு

யோகா பயிற்சியாளர் தேர்வு: ஆர்வமுள்ளோருக்கு அழைப்பு

கோவை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் கோவையில் நடத்தப்படும் யோகா வகுப்புகளில் பங்கேற்பவர்களுக்கு மாத கட்டணம் ரூ.300 வசூலிக்கப்படவுள்ளது. காலை, 6:00 முதல், 7:00 மணி வரை, 7:15 முதல் 8:15 வரை, மாலை, 4:00 முதல் 5:00 மணி வரை, 5:15 முதல், 6:15 மணி வரையும் என, தினமும் நான்கு அமர்வுகளில் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இதற்கென, யோகா பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலையால் வழங்கப்பட்ட யோகா மற்றும் இயற்கை அறிவியல் இளங்கலை பட்டம்/யோகா மற்றும் இயற்கை அறிவியல் 'டிப்ளமோ' சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தகுதி வாய்ந்த யோகா பயிற்சியாளர்கள், தங்களுடைய 'பயோ டேட்டா' மற்றும் அசல், நகல் சான்றிதழ்களுடன் வரும், 13ம் தேதி மாலை, 4:00 மணிக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தில் நேரில் வந்து, தேர்வுகளில் கலந்துகொள்ளலாம் என, மாவட்ட விளையாட்டு அலுவலர் புவனேஸ்வரி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ