மேலும் செய்திகள்
பூட்டை உடைத்து பணம் திருட்டு
17-Jul-2025
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே வெள்ளமடையில் உள்ள கனரா வங்கியின் ஏ.டி.எம்., அடிக்கடி பழுது ஏற்படுவதால், வாடிக்கையாளர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.பெரியநாயக்கன்பாளையம் அருகே வெள்ளமடையில் கனரா வங்கி கிளையின் ஏ.டி.எம்., மையம் உள்ளது. இதில், இரண்டு ஏ.டி.எம்., மிஷின்கள் வாடிக்கையாளர்களின் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டுள்ளன.இரண்டு மிஷின்களும் மாதத்தில், 20 நாட்கள் பழுதடைந்து, வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.இது குறித்து காளிபாளையம் சமூக ஆர்வலர் அன்புச்செல்வன் கூறுகையில், 'கிராமப்புறங்களில் வாடிக்கையாளர்களின் அவசர தேவைக்காகதான் ஏ.டி.எம்., மையங்கள் நிறுவப்படுகின்றன. இவை அடிக்கடி பழுதாவதால், பொதுமக்கள் நீண்ட தூரம் சென்று வேறு ஏ.டி.எம்.,ங்களை பயன்படுத்த வேண்டிய சூழல் உள்ளது. கனரா வங்கி நிர்வாகம் உடனடியாக இப்பிரச்னையில் தலையிட்டு ஏ.டி.எம்., மிஷின்களை நல்ல நிலையில் பராமரித்து, வாடிக்கையாளர்களின் சிரமங்களை போக்க முன்வர வேண்டும்' என்றார்.
17-Jul-2025