உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கேரளாவில் கார் மோதி மூதாட்டி பலி ;ஓராண்டுக்கு பின் கார் உரிமையாளர் கோவையில் கைது

கேரளாவில் கார் மோதி மூதாட்டி பலி ;ஓராண்டுக்கு பின் கார் உரிமையாளர் கோவையில் கைது

கோவை; கேரளாவில் கார் மோதி மூதாட்டி உயிரிழந்த வழக்கில் ஓராண்டுக்கு பின் கோவை விமான நிலையத்தில் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.கேரளா மாநிலத்தில் கடந்தாண்டு பிப்., 17ம் தேதி வடகரா, சரோத் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை கடந்த, பேபி என்ற மூதாட்டி, அவரது பேத்தி த்ரிஷனா மீது கார் மோதியது. படுகாயமடைந்த பேபி உயிரிழந்தார். அவரது பேத்தி த்ரிஷனா கோமா நிலையில் இருந்து தற்போது வரை மீளவில்லை.விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல் சென்றது. இதையடுத்து கேரளா போலீசார் கார் டிரைவரை, பிடிக்க தீவிரமாக தேடி வந்தனர். கேரள மாநில போலீசாரால் விசாரிக்கப்பட்ட முக்கியமான இவ்வழக்கு 'வடகரா ஹிட் அண்ட் ரன்' என, கூறப்பட்டு வந்தது. இருப்பினும் டிரைவரை அடையாளம் காண முடியாமல் போலீசார் திணறினர்.இச்சம்பவம் கேரள உயர் நீதிமன்றம் மற்றும் மனித உரிமைகள் ஆணையத்தின் கவனத்துக்கு சென்றதால் அதிகளவில் பேசப்பட்டது. விசாரணைக்காக டி.எஸ்.பி., தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு ஏற்படுத்தப்பட்டது. விசாரணையின் ஒரு பகுதியாக, 500 க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் வெள்ளை நிற கார் ஒன்று விபத்தை ஏற்படுத்தியது தெரிந்தது. தொடர் விசாரணையில் காரின் உரிமையாளர் ஷஜீல், தனது குடும்பத்துடன் பயணம் செய்யும் போது விபத்து நடந்தது தெரிந்தது. அரபு நாட்டில் பணிபுரிந்து வந்த அவரை ஆஜராக போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து அவரது டிரைவிங் லைசென்ஸை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. நேற்று முன்தினம் கோவை விமான நிலையத்துக்கு ஷஜீல் வரும் தகவல் கேரள போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து கோவை வந்த கேரள போலீசார் விமானநிலையத்தில் அவரை கைது செய்து அழைத்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kundalakesi
பிப் 11, 2025 01:31

இன்டர்போல் உதவியய் இந்தியா நாட வேண்டும். வரும் வரை எதற்கு காத்துக்கொண்டிருக்க வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை