/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பிளாட் விற்க ரூ.20 லட்சம் பெற்று மோசடி செய்த தம்பதி மீது வழக்கு
பிளாட் விற்க ரூ.20 லட்சம் பெற்று மோசடி செய்த தம்பதி மீது வழக்கு
கோவை: சாய்பாபா காலனி, என்.எஸ்.ஆர்.ரோட்டில் வசிப்பவர் ஸ்ரீ காந்த்,40. இவரது மனைவி மைதிலி,35. இருவரும் சேர்ந்து ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகின்றனர். துடியலுார், பாரதி நகரில் பிளாட் போட்டு விற்பனை செய்தனர். ஒரு சென்ட், ரூ.4.75 லட்சம் விலை நிர்ணயித்து இருந்தனர். ஒரு பிளாட் வாங்க, போத்தனுார் சாய் நகரை சேர்ந்த ஷாஜகான், எட்டு லட்சம் ரூபாய் கொடுத்து, 2022, ஜூனில் 'புக்' செய்தார். மீதி தொகை, 12 லட்சம் ரூபாயை தவணை அடிப்படையில், செலுத்தினார். மொத்த தொகை, 20 லட்சம் ரூபாய் செலுத்தியதும், பிளாட்டை பத்திரப்பதிவு செய்து தர கேட்டார். பத்திரப்பதிவு செய்து கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். சாய்பாபா காலனி போலீசில் ஷாஜகான் புகார் அளித்தார். ஸ்ரீ காந்த், மைதிலி ஆகியோர் மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.