உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 6.6 லட்சம் ரூபாய் மோசடி செய்த நிதி நிறுவன மேலாளர் மீது வழக்கு

6.6 லட்சம் ரூபாய் மோசடி செய்த நிதி நிறுவன மேலாளர் மீது வழக்கு

போத்தனூர்; கோவை, ரத்தினபுரி, முத்துகுமார் நகர் முதல் வீதியை சேர்ந்தவர் நூர்முகமது. இவரது நண்பர் ஜலீல், குனியமுத்தூர், நரசிம்மபுரம், சிந்து நகரை சேர்ந்த அன்சாரி என்பவரை அறிமுகம் செய்தார். அன்சாரி தனியார் நிதி மற்றும் கட்டுமான நிறுவன மேலாளராக பணிபுரிவதாக கூறியுள்ளார். தனது நிறுவனம், ராயல் ரெஸிடென்ஸி எனும் பெயரில், வீட்டு மனைகள் விற்பதாகவும், அதில், 37 சைட்டுகளுக்கு தான் பொறுப்பாளர் எனவும் தெரிவித்துள்ளார். அவ்விடத்தில் நடைபாதை அமைக்க, ஐந்து லட்சம் ரூபாய் தேவை என கேட்டுள்ளார். இதையடுத்து, ரூ. 6.6 லட்சத்தை அன்சாரியிடம், நூர்முகமது கொடுத்துள்ளார். ரொக்கத்தை பெற்றுக்கொண்ட அன்சாரி, நடைபாதை அமைக்கவில்லை. உறுதியளித்தபடி பணத்தையும் திருப்பித்தரவில்லை. குனியமுத்தூர் போலீசில் நூர்முகமது புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை