உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியவர் மீது வழக்கு

 குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியவர் மீது வழக்கு

தொண்டாமுத்துார்:தொண்டாமுத்துாரில், 14 வயதிற்குட்பட்ட ஐந்து சிறுவர்களை, பணியில் ஈடுபடுத்திய பாக்கு ஷெட் உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாக்கு ஷெட்களில், வடமாநில தொழிலாளர்கள், குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகின்றனர். இதில், வடமாநில தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாக எழுந்த புகாரின்பேரில், தொழிலாளர் நலத்துறை, கல்வித்துறை, குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து, பாக்கு செட்டுகளில், கடந்த, 20ம் தேதி ஆய்வு செய்தனர். தொண்டாமுத்துார், கிழக்கு வீதியில் உள்ள பேபி,56 என்பவருக்கு சொந்தமான பாக்கு ஷெட்டில் ஆய்வு மேற்கொண்டபோது, 14 வயதிற்குட்பட்ட 5 சிறுவர்கள் பணியில் ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, சிறுவர்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். சிறுவர்களை பணியில் அமர்த்திய உரிமையாளர் மீது தொழிலாளர் நலத்துறை உதவி இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தொண்டாமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். இப்புகாரின்பேரில், பாக்கு ஷெட் உரிமையாளர் பேபி மீது போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ