உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கூடைப்பந்து போட்டியில் அபார ஆட்டம்: சி.சி.எம்.ஏ., பள்ளி அணி மூன்றாம் இடம்

கூடைப்பந்து போட்டியில் அபார ஆட்டம்: சி.சி.எம்.ஏ., பள்ளி அணி மூன்றாம் இடம்

கோவை: கோவை நேரு ஸ்டேடியம் எதிரே உள்ள மாநகராட்சி கூடைப்பந்து மைதானத்தில், எலினா நினைவு கூடைப்பந்து போட்டி, நான்கு நாட்கள் நடந்தது. மாவட்ட கூடைப்பந்து சங்கம் இணைந்து நடத்திய இப்போட்டியில் அரசு, தனியார் பள்ளிகளை சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. ராஜ வீதியில் உள்ள துணி வணிகர் சங்க அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி(சி.சி.எம்.ஏ.,) அணி, எஸ்.வி.ஜி.வி., 'ஏ' பள்ளி அணியை, 12-0 என்ற புள்ளி கணக்கிலும், சுகுணா பள்ளி அணியை, 25-7 என்ற புள்ளிகளிலும் வென்றது. அரையிறுதி போட்டியில், அல்வெர்னியா பள்ளி அணி, 43-6 என்ற புள்ளிகளில் சி.சி.எம்.ஏ., பள்ளி அணியை வென்றது. மூன்றாம் இடத்துக்கான போட்டியில் சி.சி.எம்.ஏ., பள்ளி அணியும், பீப்பல் பள்ளி அணியும் விளையாடின. இதில், 10-8 என்ற புள்ளிகளில் சி.சி.எம்.ஏ., பள்ளி அணி வென்று, மூன்றாம் இடத்தை தட்டியது. சிறந்த விளையாட்டு வீராங்கனையாக லித்திரா, இளம் விளையாட்டு வீரர் விருது லெஜிதாவுக்கும் வழங்கப்பட்டது. முதலிடத்தை அல்வெர்னியா பள்ளியும், இரண்டாம் இடத்தை பாரதி பள்ளி அணியும் வென்றன. வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன. துணி வணிகர் சங்க பள்ளி உடற்கல்வி இயக்குனர் குமுதா, பயிற்சியாளர் கலைசெல்வி ஆகியோர், மாணவியரை பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை