சி.டி.சி.ஏ., டிவிஷன் கிரிக்கெட் போட்டி; நான்கு விக்கெட் வீழ்த்திய அணி வீரர்கள்
கோவை; கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.,) இரண்டாவது டிவிஷன் போட்டிகள் எஸ்.என்.எம்.வி., பி.எஸ்.ஜி., ஐ.எம்.ஸ்., உள்ளிட்ட மைதானங்களில் நடந்துவருகிறது. ஜாலி ரோவர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும், ஆறுமுகம் லெவன் பேட்ரியாட்ஸ் கிரிக்கெட் கிளப் அணியும் மோதின.முதலில் பேட்டிங் செய்த, ஜாலி ரோவர்ஸ் அணியினர், 49.2 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 194 ரன்கள் எடுத்தனர். வீரர்கள் சுஜித், 36 ரன்களும், பிரியதர்ஷன், 32 ரன்களும், நிஷாந்த், 32 ரன்களும், ஸ்ரீ ஹரி, 31 ரன்களும் எடுத்தனர்.அடுத்து விளையாடிய ஆறுமுகம் லெவன் பேட்ரியாட்ஸ் அணியினர், 38.3 ஓவரில் நான்கு விக்கெட் இழப்புக்கு, 195 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர். வீரர்கள் பிரதீப் பாண்டியன், 63 ரன்களும், சந்தீப், 48 ரன்களும் எடுத்தனர்.ஐந்தாவது டிவிஷன் போட்டியில், கே.எப்.சி.சி., அணியும், சீஹாக்ஸ் கிரிக்கெட் கிளப் அணியும் மோதின. பேட்டிங் செய்த கே.எப்.சி.சி., அணியினர், 32.4 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 162 ரன்கள் எடுத்தனர். வீரர்கள் வினோத்குமார், 45 ரன்களும், ஜெயக்குமார், 37 ரன்களும் எடுத்தனர்.எதிரணி வீரர்கள் பிரணவ் ஆதித்யா மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா நான்கு விக்கெட்கள் வீழ்த்தினர். சீஹாக்ஸ் அணியினரோ, 33.3 ஓவரில் நான்கு விக்கெட் இழப்புக்கு, 165 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர். வீரர்கள் ஜெரிஷ், 71 ரன்களும், பிரணவ் ஆதித்யா, 34 ரன்களும் எடுத்தனர்.