மேலும் செய்திகள்
ராமபிரான் கோவிலில் நாளை ஆண்டு விழா
12 minutes ago
பள்ளியில் உணவுத்திருவிழா
15 minutes ago
அரசு கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் பொறுப்பேற்பு
17 minutes ago
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா கொண்டாடப்பட்டது. ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, பொள்ளாச்சி வடக்கு வட்டார வள மையத்தில், உலக மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது. வடக்கு வட்டார வள மைய பொறுப்பு ஆசிரியர் ஸ்வப்னா தலைமை வகித்தார். ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பு பயிற்றுநர்கள், இயன்முறை டாக்டர், பாதுகாப்பு மைய ஆசிரியர், உதவியாளர் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் பெற்றோர் அனைவரும், 'ஒற்றுமையை வளர்ப்போம்' என உறுதிமொழி ஏற்றனர். அதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளி மாணவர்கள், மாறுவேட போட்டிகள், விளையாட்டு போட்டிகள், ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில், பங்கேற்ற மணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
12 minutes ago
15 minutes ago
17 minutes ago