மயானம் அளவீடு பணிகள் தீவிரம்
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சொலவம்பாளையத்தில் உள்ள மயானம் அளவீடு பணி நடந்தது. கிணத்துக்கடவு, சொலவம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட இ.பி., அலுவலகம் அருகே, அருந்ததியினர் சமூகத்தினருக்கான மயானம் உள்ளது. இந்த மயானத்தின் ஒரு பகுதி ஆக்கிரமிப்பில் இருந்தது. இதைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள், மயானம் பகுதியை அளவீடு செய்து, தர வேண்டும் என மனு அளித்து வந்தனர். இந்நிலையில், கிணத்துக்கடவு வருவாய்த்துறை அதிகாரிகள் மயான இடத்தை ஆய்வு செய்து அளவீடு பணியை மேற்கொண்டனர்.