உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெண்ணிடம் செயின் பறிப்பு

பெண்ணிடம் செயின் பறிப்பு

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, கோவில்பாளையம் அருகே உள்ள காளியண்ணன்புதூரை சேர்ந்தவர் அனிதா, 30; தனியார் கம்பெனி ஊழியர். இவர், வேலை முடிந்து மாலையில் வீட்டுக்கு வந்தவுடன், பக்கத்து வீட்டு நபருடன் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது, இருசக்கர வாகனத்தில் அந்த அடையாளம் தெரியாத இருவர், அனிதாவின் கழுத்தில் இருந்த இரண்டு பவுன் தங்க செயினை பறித்து சென்றனர். இது குறித்து அனிதா கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அருகில் உள்ள சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி