உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

கோவை : சேலம் கோட்ட ரயில்வேயில் பராமரிப்பு பணிகள் நடப்பதால், ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, எர்ணாகுளம் - டாட்டா நகர் எக்ஸ்பிரஸ்(18190) ரயில், வரும், 3, 5, 7 ஆகிய தேதிகளில், போத்தனுார், கோவை திருப்பூர் வழியாக இயக்கப்படும். கோவை - ஈரோடு இடையே ரயில் இயக்கம், 50 நிமிடம் ஒழுங்கு படுத்தப்படும்.அதேபோல், வரும், 3, 5, 7ம் தேதிகளில், ஆலப்புழா - தன்பாத்(13352) எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம், 45 நிமிடங்கள் ஒழுங்குபடுத்தப்படும் என, சேலம் கோட்ட ரயில்வே துறை அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை