நிலத்தடி நீர் தொட்டியில் விழுந்த குழந்தை இறப்பு
ஆனைமலை: ஆனைமலை அருகே, நிலத்தடி நீர் தொட்டியில் தவறி விழுந்த மூன்று வயது குழந்தை இறந்தது குறித்து, கோட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர். மத்தியபிரதேச மாநிலம், ரேவா அட்டாரியா பகுதியை சேர்ந்தவர் சதீஷ்கோல், 32. இவர், மனைவி பிட்டு உடன், கோட்டூரில் தனியார் காயர் நிறுவனத்தில் தங்கி வேலை செய்கிறார். வீட்டின் அருகில் விளையாடி கொண்டிருந்த, இவளது மூன்று வயது பெண் குழந்தை காணவில்லை. சந்தேகத்தின் பேரில், அங்கு இருந்த நிலத்தடி நீர் தொட்டியில் தேடியபோது, அதில் குழந்தை மூழ்கி இறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். வீட்டின் முன் விளையாடிக்கொண்டு இருந்த குழந்தை தவறி தொட்டியில் விழுந்து இருக்கலாம் என்ற, கோட்டூர் போலீசார் தெரிவித்தனர்.