ஹரிஸ்ரீ பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
கோவைகோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பள்ளியான செட்டிநாடு ஹரி ஸ்ரீ வித்யாலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. கொண்டாட்டத்தில், மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் ஒன்றிணைந்து படைப்பாற்றல் திறன்களை வெளிகொணரும் வகையில் நிகழ்வுகள் நடத்தப்பட்டன. மாணவர்களால் செய்யப்பட்ட நகைகள், மெழுகுவர்த்திகள், கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்கள், உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டன. மகிழ்ச்சியை தெரிவிக்கும் வகையில் அனைவரும் ஒன்றிணைந்து நடனமாடி வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் தெரிவித்தனர். ஒற்றுமை, மனிதநேயம் மற்றும் மகிழ்ச்சியைப் பரப்பும் ஒரு நல்லிணக்க விழாவாக நிறைவுபெற்றது.