உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விமானநிலையத்தில் சிக்கிய ரூ.35 லட்சம் சிகரெட், டிரோன்

விமானநிலையத்தில் சிக்கிய ரூ.35 லட்சம் சிகரெட், டிரோன்

கோவை; ஷார்ஜாவில் இருந்து ரூ.37.09 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள், டிரோன்கள் கடத்திய ஐந்து பேரிடம், சுங்கத்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர். கோவை விமான நிலையத்துக்கு, ஷார்ஜாவில் இருந்து நேற்று அதிகாலை 3:45 மணிக்கு, ஏர் அரேபியா விமானம் வந்தது. பயணிகளின் உடமைகளை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ஐந்து பயணிகள் தங்களது உடமைகளில், வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள், டிரோன்களை மறைத்து கடத்தி வந்தது தெரிந்தது. அவர்களை பிடித்த சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்தனர். அவர்கள், திருவாரூரை சேர்ந்த அப்துல் ரஹீம், 40, துாத்துக்குடியை சேர்ந்த சையது சிராஜூதீன், 39, சிவகங்கையை சேர்ந்த ஜைனலாபூதீன், 35, திருச்சியை சேர்ந்த முகமது சித்திக், 35, சிவகங்கையை சேர்ந்த முகமது அப்சல், 33 எனத் தெரிந்தது. அவர்களிடம் இருந்து ரூ.37.09 லட்சம் மதிப்பிலான, 856 பாக்கெட் வெளிநாட்டு சிகரெட்டுகள், 36 டிரோன்களை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ