உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வெளிச்சம் இல்லாததால் குடிமகன்கள் அட்டகாசம்; பணிக்கு சென்று திரும்பும் பெண்கள் அச்சம்

வெளிச்சம் இல்லாததால் குடிமகன்கள் அட்டகாசம்; பணிக்கு சென்று திரும்பும் பெண்கள் அச்சம்

புதரால் தொல்லை

கோவை கே.கே.புதுார், வார்டு எண் 43, நாச்சிமுத்து லே--அவுட் கிராஸ் 1ல் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடம், கடந்த ஆறு ஆண்டுகளாக சுத்தம் செய்யாமல் புதர்மண்டி உள்ளது. செடி, கொடிகள், அருகில் உள்ள மின் கம்பங்களில் சுற்றும் அளவுக்கு வளர்ந்துள்ளது. பாம்பு தொல்லையும் உள்ளது. அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களுக்கு, மிகவும் தொந்தரவாக உள்ளது.--- சந்தோஷ், கே.கே.புதுார்.

பராமரிப்பு இல்லை

பூமார்க்கெட் தேவாங்கப்பேட்டை வீதி 1, சரியான பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டியுள்ளது; சாலையும் சரியாக இல்லை. இரவில் செல்ல பயமாக உள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.--தீபா, பூமார்க்கெட்.

இரவில் திக்... திக்...

போத்தனுார் -செட்டிப்பாளையம் சாலையில், மயிலாடும்பாறை பேருந்து நிலையத்திலிருந்து, கோவை கார்டன் செல்லும் இணைப்பு சாலையில், தெருவிளக்கு வசதியில்லாததால், இங்கு மது அருந்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாலை வேளைகளில் பணிக்கு சென்று திரும்பும் பெண்கள், கல்லுாரி மாணவியர் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.- -அருண், செட்டிப்பாளையம்.

குதிரைகள் தொல்லை

கோவைப்புதுார் 90வது வார்டு கியூ பிளாக் சிறுவர் பூங்கா முன், சாலையில் குதிரைகள் தொல்லை அதிகமாக உள்ளது. வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் பூங்காவுக்கு வரும் குழந்தைகளும் அச்சத்தில் உள்ளனர்.--பிரபாகரன், கோவைப்புதுார்.

கழிவுநீர் தேக்கம்

கோவை ராம்நகர் ஈஸ்வரன் லே-அவுட்டில் கழிவுநீர் வெளியேறி தேங்கி நிற்கிறது. கொசுக்கள் உற்பத்தியாகி, இப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். மூன்றுக்கும் மேற்பட்டோர், காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். கழிவுநீர் பிரச்னையை சரி செய்து, கொசுக்கள் பெருகாமலிருக்க, உரிய நடவடிக்கை எடுத்தால், இப்பகுதி மக்களுக்கு உதவியாக இருக்கும்.-- கோபிநாத், ராம்நகர்.

சுகாதார சீர்கேடு

மாநகரில், 56வது வார்டு ஒண்டிப்புதுார் நஞ்சப்பன் வீதியில் குப்பை கொட்டப்பட்டு தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குப்பையை முறையாக அகற்ற, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- கவுரி சங்கர், நஞ்சப்பன் வீதி.

திறந்தே இருக்குது

சாய்பாபா காலனி கே.கே.புதுார் பகுதியில், சாக்கடை கால்வாய் மூடப்படாமல் உள்ளது. இரவு நேரங்களில் இது தெரியாமல் யாராவது விழ வாய்ப்புள்ளது. திறந்தநிலையில் வைக்கப்பட்டுள்ள சாக்கடை கால்வாய் பகுதியை மூட, விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- லெனின், கே.கே.புதுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி