மேலும் செய்திகள்
சிட்டி க்ரைம்
21-Nov-2024
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் முனியசாமி, 42; கவுண்டம்பாளையம் பகுதியில் தங்கியுள்ளார். இவர் மணியகாரம்பாளையம் பகுதியில் நடந்து சென்ற போது, அவ்வழியாக வந்த அஜய் பிளேக்ஸ், 21 என்ற வாலிபர், மது அருந்த பணம் கேட்டுள்ளார். முனியசாமி கொடுக்க மறுத்ததால் அவரை தாக்கி, பணத்தை பறித்து அங்கிருந்து சென்றார். முனியசாமி கவுண்டம்பாளையம் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் அஜயை கைது செய்தனர். பொது இடத்தில் 'ஸ்மோக்கிங்'
காந்திபுரம் பகுதியில் போலீசார் ரோந்து சென்ற போது அப்பகுதியில் உள்ள பேக்கரி முன் பொது மக்களுக்கு இடையூறாக புகைபிடித்த காந்திபுரம் பகுதியை சேர்ந்த சகுபர் அலி, 55 மற்றும் சந்தனபீர் அலி ஆகியோர் மீது காட்டூர் போலீஸ் வழக்கு பதிவு செய்தனர். போதை மாத்திரை பறிமுதல்
செல்வபுரம் பகுதியில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபடுவோரை பிடிக்க, போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, தெலுங்குபாளையம் ரவுண்டானா பகுதியில் இருந்த பிரதீப், 24 என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவரிடம் போதைக்காக பயன்படுத்தப்படும் 25 வலி நிவாரணி மாத்திரைகள் இருந்துள்ளது. இதையடுத்து, போலீசார் பிரதீப்பை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
21-Nov-2024