உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  காலநிலை மாற்றத்தின் விளைவு கருத்தரங்கம் காலநிலை மாற்றத்தின் விளைவு கருத்தரங்கம்

 காலநிலை மாற்றத்தின் விளைவு கருத்தரங்கம் காலநிலை மாற்றத்தின் விளைவு கருத்தரங்கம்

மேட்டுப்பாளையம்: -: தமிழக அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை, சுற்றுச்சூழல் கல்வித் திட்டத்தின் கீழ், தேசிய பசுமை படை மற்றும் சுற்றுச்சூழல் மண்டலங்களின் சார்பாக, மேட்டுப்பாளையம் அருகே உள்ள குமரன் கலை அறிவியல் கல்லூரியில், காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகளும், அதனை தடுக்கும் நடவடிக்கைகளும் குறித்த கருத்தரங்கம் நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சுகுணா தலைமை வகித்து பேசினார். கோவை கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் பாலுசாமி வரவேற்றார். தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறையின் திட்ட அலுவலர் முத்துக்குமார், பவர் பாயிண்ட் வாயிலாக, பட விளக்க காட்சி காண்பித்து, அதை விளக்கி கூறினார். மேலும் நீர்வளம், வனவலம், பல்லுயிர் பாதுகாப்பு, காற்று மாசுபடுதலை குறைத்தல் மற்றும் நுண்ணுயிர் பிளாஸ்டிக் வாயிலாக, கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதனை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து, கருத்துக்களை விளக்கி கூறினார். கருத்தரங்கில், 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், பேராசிரியர்கள் பங்கேற்றனர். வளாகத்தில் மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டு, அதை பாதுகாக்க உறுதிமொழி எடுத்தனர். அனைவருக்கும் துணிப்பை வழங்கப்பட்டது. பேராசிரியர் ஜீன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை