மேலும் செய்திகள்
தீபாவளியையொட்டி ஆடு விற்பனை ஜோர்
19-Oct-2025
ஆடு, மாடுகளை கடித்து குதறிய வெறி நாய்கள்
15-Oct-2025
கோவை: நஞ்சப்பா ரோடு 'பார்க் கேட்' பகுதியில் உள்ள சண்டே மார்க்கெட்டில் ரெடிமேட் ஆடைகள் மற்றும் பனியன் ஆடைகள் வாங்க, மக்கள் திரண்டனர். வாரத்தில் ஞாயிறு மட்டும், சண்டே மார்க்கெட் கடைகள் திறப்பது வழக்கம். இங்கு, ஏராளமான துணிக்கடைகள், செருப்பு கடைகள் மற்றும் பேன்சி பொருள் கடைகள் உள்ளன. திருப்பூர், கோபி, ஈரோடு, கரூர் பகுதிகளில் இருந்து பனியன், பெட்சீட், லுங்கி, வேஷ்டி மற்றும் துண்டு உள்ளிட்ட துணிகளை, வியாபாரிகள் கொண்டு வந்து, இங்கு விற்பனை செய்து வருகின்றனர். தரமான துணிகளும் மலிவான விலையில் கிடைக்கும் என்பதால், இங்கு பலர் ரெகுலர் வாடிக்கையாளராக உள்ளனர். நேற்று ஞாயிறு மற்றும் தீபாவளிக்கு முந்தைய நாள் என்பதால், சண்டே மார்க்கெட்டில் காலையில் இருந்தே கூட்டம் களைகட்டியது. இங்கு ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள், பேன்சி பொருட்கள் வாங்கலாம். கடை வியாபாரி ஒருவர் கூறுகையில், 'போன வருஷம் மழையால் வியாபாரம் குறைந்து விட்டது. இந்த முறை பரவாயில்லை' என்றார்.
19-Oct-2025
15-Oct-2025