உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேங்காய் விலை தொடர்ந்து உயர்வு

தேங்காய் விலை தொடர்ந்து உயர்வு

அன்னுார்; ஏல விற்பனையில் தேங்காய்க்கு இதுவரை இல்லாத அதிக விலை கிடைத்தது.அன்னுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை, வேளாண் விளை பொருட்கள் ஏல விற்பனை நடக்கிறது. நேற்று 2 ஆயிரத்து 836 கிலோ எடையுள்ள 5,745 தேங்காய்கள் விற்பனைக்கு வந்திருந்தன.குறைந்தபட்சம் ஒரு கிலோ தேங்காய் 59 ரூபாய் முதல், அதிகபட்சம் 64 ரூபாய் 50 காசுக்கு விற்பனையானது. தேங்காய் பருப்பு ஒரு கிலோ குறைந்தபட்சம் 161 ரூபாய் 89 காசு முதல், அதிகபட்சம் 208 ரூபாய் 79 காசுக்கு விற்பனையானது.விவசாயிகள் கூறுகையில், 'அன்னுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு தேங்காய்க்கு அதிக விலை கிடைத்துள்ளது,' என்றனர்.இத்தகவலை விற்பனை கூட கண்காணிப்பாளர் சந்திரசேகரன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !