உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மேட்டுப்பாளையம்:கோவை, திருப்பூர் மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாக பில்லுார் அணை, பவானி ஆறு விளங்குகிறது. கோவை மாநகராட்சி மற்றும் பல்லடம் வரை, வழியோர கிராமங்களுக்கு, பில்லுார் அணையிலிருந்து, நேரடியாக பில்லுார் 1, 2 குடிநீர் திட்டங்களுக்கு, நாளொன்றுக்கு, 25 கோடி லிட்டர் நீர் எடுக்கப்படுகிறது.கோவை மாநகராட்சி விரிவுபடுத்தியதை அடுத்து, மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, தொலைநோக்கு பார்வையுடன், 2048ம் ஆண்டு மக்கள் தொகையை கணக்கிட்டு, பில்லுார் மூன்றாவது குடிநீர் திட்டம் ஏற்படுத்தப்பட்டது.திட்டத்தில் இருந்து நாளொன்றுக்கு, 17 கோடியே, 85 லட்சம் லிட்டர் நீர் எடுத்து சுத்திகரித்து, கோவை மாநகராட்சிக்கு அனுப்பப்படுகிறது.மூன்று திட்டங்களுக்கும், நாள் ஒன்றுக்கு, 42 கோடியே, 85 லட்சம் லிட்டர் நீர் எடுக்கப்படுகிறது. பில்லுார் அணையின் மொத்த நீர்மட்டம், 100 அடி. அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில், இரு மாதங்களாக மழை பெய்யாததால், நீர்வரத்து முற்றிலும் நின்றுள்ளது. தற்போது அணையில், 66 அடியாக நீர்மட்டம் குறைந்துள்ளதால், நீர் எடுக்கும் கிணற்றில் உள்ள வால்வு வெளியே தெரிகிறது.பில்லுார் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீர், பவானி ஆற்றுக்கு வருகிறது. இந்த ஆற்றில் இருந்து, திருப்பூர் மாநகராட்சி மற்றும் அன்னுார், அவிநாசி, சூலுார், மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை வழியோர கிராமங்களுக்கு என, 19 கூட்டு குடிநீர் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.இந்த திட்டங்களுக்கு, உத்தேசமாக, தினமும், 20 கோடி லிட்டர் தண்ணீர், பவானி ஆற்றில் இருந்து எடுக்கப்படுகிறது.தற்போது, பில்லுார் அணையில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ள நிலையில், தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்படும் போது, மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படும்.எனவே, தமிழக அரசு போர்க்கால அடிப்படையில், குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Ram pollachi
பிப் 22, 2024 14:30

டாலரை வைத்து என்ன செய்வது? விளைநிலங்களை அழித்தால் மனித வாழ்வு அஸ்தமனம் ஆகிவிடும்... ஆக திருப்பூரில் உயிர் நீர் கிடையாது! உயிரை எடுக்கும் சரக்கு கிடைக்கும்... நேற்று இன்று அல்ல என்றுமே திருப்பூர் ஒரு வறட்சியான பகுதி.


Nagarajan D
பிப் 22, 2024 10:44

குடிநீர் பஞ்சம் எதிர்பார்த்தது தான்... ஆனால் இந்த அரசியல் வியாதிகள் என்ன திட்டம் போட்டு 24 மணிநேர குடிநீருக்கு குழாய்கள் பதித்தானுங்க? வாரத்திற்கு 1 மணிநேரம் வருவதே பெரிய விஷயம் பிறகு எப்படி 24 மணிநேரம்? சாத்தியப்படாத திட்டங்களுக்கு லஞ்சம் வாங்குவதற்காகவே திட்டங்கள் போடப்படுகிறது....


Mohan
பிப் 22, 2024 10:19

நம் மக்களுக்கு சிக்கனமா தண்ணிய பயன்படுத்த முனைவது இல்லை.. எதனை குழாய்களில் தண்ணீர் வீணாக போகிறது வீட்டில் சிக்கனமா பயன்படுத்தனும் இதனை கோடி லிட்டர் தண்ணீர் ஒரு நாளைக்கு அணையில் இருந்து எடுத்த எங்கிருந்து விளங்கும்... விவசாயத்துக்கு எங்க போறது .....


அப்புசாமி
பிப் 22, 2024 07:49

ஜல்ஜீவன் குழாய் பதிச்சிருப்பாங்களே.. தண்ணி அங்கே புடிச்சிக்கோங்க.


Mohan
பிப் 22, 2024 10:15

அடேய் அறிவிலி பைப்பை தாண்ட போட்டு குடுப்பாங்க தண்ணி விடியல் அரசு தான் குடுக்கணும் ...ஏன்டா உனக்கு தண்ணி வரலேன்னாலும் மோடியை தான் சொல்லுவியா போயி பதினோரு மணி மருத்துவரை போயி பாரு


Ramesh Sargam
பிப் 22, 2024 07:00

சூரிய கதிர் வீச்சை மறைக்க சுமார் ஒரு லட்சம் கோடியில் ஒரு திட்டம் அடுத்த பட்ஜெட்டில் அறிவிப்போம். அதுவரை பொறுமையாக இருக்கவும். இப்படிக்கு ....


Kasimani Baskaran
பிப் 22, 2024 05:34

கோடை காலம் வருவதால் நீர் ஆவியாவதை தடுக்க தெர்மோகோல் போடுவதுதான் திராவிட பங்காளி விஞ்ஞானம்.


சமீபத்திய செய்தி