உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தேசிய ரோடு சைக்கிளிங் போட்டி பெருமை சேர்த்த கோவை வீரர்கள்

 தேசிய ரோடு சைக்கிளிங் போட்டி பெருமை சேர்த்த கோவை வீரர்கள்

கோவை: ஒடிசா மாநிலம், சாம்பல்பூரில், 30வது தேசிய ரோடு சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டி நான்கு நாட்கள் நடந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 14 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில், கோவையில் இருந்து பங்கேற்ற வீரர் அபினவ் 'டீம் டைம் டிரயல்' பிரிவில் வெண்கல பதக்கமும், சப் ஜூனியர் பிரிவில் வீரர் பிரனேஷ் 'ரோட் ரேஸ்' போட்டியில் வெண்கல பதக்கமும், சப் ஜூனியர் பெண்கள் பிரிவில் ரோட் ரேஸ் போட்டியில் வீராங்கனை ஹாசினி வெள்ளி பதக்கமும் வென்று தமிழகத்திற்கும், கோவைக்கும் பெருமை சேர்த்துள்ளனர். வெற்றி பெற்றவர்களை, தமிழ்நாடு மற்றும் கோயம்புத்துார் சைக்கிளிங் சங்க நிர்வாகிகள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை