உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை மாவட்ட கிரிக்கெட் அணி தேர்வு; 25 வயதுக்கு உட்பட்டோருக்கு அழைப்பு

கோவை மாவட்ட கிரிக்கெட் அணி தேர்வு; 25 வயதுக்கு உட்பட்டோருக்கு அழைப்பு

கோவை; கோவை மாவட்ட கிரிக்கெட் அணிக்கான, 25 வயதுக்குட்பட்ட வீரர்கள் தேர்வு வரும், 24ம் தேதி நடக்கிறது.தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்டங்களுக்கு இடையே, 25 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டி ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. இப்போட்டியில் பங்கேற்க கோவை மாவட்ட கிரிக்கெட் அணிக்கான, 25 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் தேர்வு, ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி மைதானத்தில் வரும், 24ம் தேதி மதியம், 2:30 மணிக்கு நடக்கிறது.பங்கேற்க விரும்பும் வீரர்கள், 1999ம் ஆண்டு செப்., 1ம் தேதி அன்றோ, அதன் பின்னரோ பிறந்திருத்தல் வேண்டும். வீரர்கள் வெள்ளைச் சீருடை அணிந்து, கிரிக்கெட் உபகரணங்களை தாங்களே கொண்டு வரவேண்டும். தவிர, ஆதார் மற்றும் பிறப்பு சான்றிதழ் நகல் கொண்டு வரவேண்டும்.கோவையில் பிறக்காது, இங்கு கல்வி பயில்வோர் அந்தந்த கல்வி நிறுவனங்களில் உரிய சான்றிதழ்கள் பெற்றுவர வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 80729 48889, 94420 02622 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்புகொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை