உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாலை மறியல்: தி.மு.க.,வினர் கைது

சாலை மறியல்: தி.மு.க.,வினர் கைது

பொள்ளாச்சி : பொள்ளாச்சி சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க.,வினரை போலீசார் கைது செய்து, பின் விடுவித்தனர்.சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலினை, போலீசார் கைது செய்தனர். இதனால், தி.மு.க.,வினர் பல பகுதிகளில் சாலை மறியல் உட்பட ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் அருகில், தி.மு.க., நகர செயலாளர் செல்வராஜ் தலைமையில் கட்சியினர், சாலை மறியலில் ஈடுபட்டு, தமிழக அரசையும், போலீசாரையும் கண்டித்து கோஷமிட்டனர். போலீசார் இவர்களை கைது செய்து, திருமண மண்டபத்துக்கு அழைத்து சென்றனர். அரை மணி நேரத்துக்கு பின் விடுவித்தனர்.அதிகாரி இருக்கையில்: சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க.,வினரை கைது செய்த போலீசார், பலரை, டூரிஸ்ட் வேனில் அழைத்து சென்றனர். மீதமிருந்த கட்சியினரை, நெடுஞ்சாலை ரோந்துப் போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். தி.மு.க., நகர செயலாளர் செல்வராஜ், எஸ்.ஐ.,யின் இருக்கையில் அமர்ந்து திருமண மண்டபத்துக்கு சென்றார். அதிகாரியின் இடத்தில் அமர்ந்து போலீசாரை கண்டித்து கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி