உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உலக வெப்பமாதல் கருத்தரங்கம்

உலக வெப்பமாதல் கருத்தரங்கம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லூரி பன்னாட்டு வணிகவியல் துறை சார்பில் உலகம் வெப்பமாதல் குறித்து கருத்தரங்கு நடந்தது. துறை தலைவர் விக்னேஷ் வரவேற்றார். கல்லூரி முதல்வர் பத்ரிஸ்ரீமன் நாராயணன் தலைமை வகித்தார். பொள்ளாச்சி டி.எஸ்.பி., பாலாஜி, ஈஷா யோகா மைய பசுமை கரங்கள் திட்டத்தை சேர்ந்த சுவாமி சவோலா ஆகியோர் கருத்தரங்கை துவக்கி வைத்தனர். உலக வெப்பமயமாதல் குறித்து விளக்கும் வகையில் கண்காட்சி நடந்தது. இதில், 'மரங்களை அழிப்பதால், உலகம் வெப்பமயமாகிறது. எனவே, மரக்கன்றுகள் அதிகளவில் நட வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து, ஈஷா யோகா மையம் சார்பில் மூன்று மரக்கன்றுகள் நடப்பட்டன. கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை