உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சீனாவில் விளையாட கோவை வீரர் தேர்வு

சீனாவில் விளையாட கோவை வீரர் தேர்வு

சீ னாவில் இம்மாதம், 20 முதல், 24ம் தேதி வரை நடக்கும் ஆசிய இளைஞர் சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழக வீரர் தீப் சரண் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் வீரபாண்டியை சேர்ந்த இளம் தடகள வீரரான தீப் சரண்,17. 'வால் கிளைம்பிங்' என்ற சுவர் போன்ற உயரமான பகுதியில் ஏறும் விளையாட்டில் நிபுணத்துவம் பெற்றதால், சீனாவில் நடக்கும் ஆசிய இளைஞர் சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழக அளவில் முதல் முறையாக கலந்து கொள்ள உள்ளார். கோவை மாவட்டம் கே.எஸ்.ஐ.ஆர்.எஸ்., சர்வதேச பள்ளியில் தீப்சரண், பிளஸ், 2 வகுப்பு படிக்கிறார். இவர் கோவையில் உள்ள 'கிளைப் ஊன்' விளையாட்டு ஏறும் மையம் மற்றும் பெங்களூருவில் உள்ள சிறப்பு மையத்தில் பயிற்சி பெற்று வருகிறார். ஆசியா முழுவதிலும் இருந்து சிறந்த இளம் விளையாட்டு வீரர்களை ஒன்றிணைக்கும் போட்டியில், தமிழ்நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சீனாவில் நடக்கும் ஆசிய இளைஞர் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை