உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வனப்பகுதியில் பிளாஸ்டிக், மது பாட்டில்கள் சேகரிப்பு

வனப்பகுதியில் பிளாஸ்டிக், மது பாட்டில்கள் சேகரிப்பு

மேட்டுப்பாளையம் ; யானைகள் உலவும் பகுதியில், 550 மது பாட்டில்கள் மற்றும் 150 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டன. மேட்டுப்பாளையம் வனச்சரகம், 9,780 எக்டேர் பரப்பில் அமைந்துள்ளது. மேட்டுப்பாளையம் --ஊட்டி சாலை, கல்லாறு வனப்பகுதி, பில்லூர் டேம் வனப்பகுதி உள்ளிட்டவைகள் யானைகள் அதிகம் நடமாடும் பகுதியாகும். யானைகளை பாதுகாக்கும் பொருட்டு, கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் அறிவுறுத்தலின் படி, மேட்டுப்பாளையம் வனச்சரகர் சசிக்குமார் உத்தரவின் பேரில் பிளாஸ்டிக் பொருட்கள், மதுபான பாட்டில்களை அப்புறம் படுத்தும் பணி, வனவர் கருணாகரன் மேற்பார்வையில் நடந்தது. இதில் சுமார் 150 கிலோ பிளாஸ்டிக் பொருட்களும், 550 மதுபான பாட்டில்களும் சேகரிக்கப்பட்டன. இதுகுறித்து வன ஆர்வலர்கள் கூறுகையில், யானைகள் உலவும் வனப்பகுதியில் பிளாஸ்டிக் மற்றும் மதுபாட்டில்கள் இருக்கும் பட்சத்தில், யானைகள் பிளாஸ்டிக்கை உண்ணும் ஆபத்து உள்ளது. அதேபோல் உடைந்த மது பாட்டில்களை யானைகள் மிதித்து, அதன் மீது நடந்து செல்லும் போது, யானைகளின் பாதங்களில் காயங்கள் ஏற்படும். இது யானைகளின் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்றனர். இதுகுறித்து, மேட்டுப்பாளையம் வனச்சரகர் சசிக்குமார் கூறுகையில், வனப்பகுதிக்குள் பிளாஸ்டிக் பொருட்கள், மது பாட்டில்களை எறிய கூடாது. அவ்வாறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.வனவிலங்குகளுக்கு கண்டிப்பாக உணவளிக்கக்கூடாது. சாலையோரங்களில் அமர்ந்து சாப்பிட்டு விட்டு அந்த கழிவுகளை வனப்பகுதிக்குள் வீசக்கூடாது, என்றார்.---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை