உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இறகுப்பந்து போட்டியில் அபாரம்; காலிறுதிக்கு தகுதி பெற்ற கலெக்டர்

இறகுப்பந்து போட்டியில் அபாரம்; காலிறுதிக்கு தகுதி பெற்ற கலெக்டர்

கோவை; மாவட்ட அளவிலான 'முதல்வர் கோப்பை' விளையாட்டு போட்டிகளில், அரசு ஊழியர்களுக்கு செஸ், கேரம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன. நவ இந்தியாவில் உள்ள எஸ்.என்.ஆர்., கல்லுாரியில் இறகுப்பந்து போட்டி நேற்றும், இன்றும் நடக்கிறது. இதில், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில், 64 பேரும், இரட்டையர் பிரிவில், 32 பேரும் போட்டியிடுகின்றனர். பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில், 23 பேரும், இரட்டையர் பிரிவில், 18 பேரும் விளையாடுகின்றனர். மாவட்ட கலெக்டர் பவன்குமார் ஒற்றையர் பிரிவில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். முதல் போட்டியில், வீரர் தனபாலை, 21-8, 21-7 என்ற புள்ளிகளிலும், இரண்டாம் போட்டியில் வீரர் சங்கர் குமாரை, 21-6, 21-6 என்ற புள்ளிகளிலும், மூன்றாம் போட்டியில் யோகராஜாவை, 21-9, 21-9 என்ற புள்ளிகளிலும் வென்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். அதேபோல், வீரர் கிளாசன் ஆலிவர், 21-9, 21-7 என்ற புள்ளிகளில் வீரர் பைரவனை வென்றார். தொடர்ந்து போட்டிகள் நடக்கின்றன. இதில், முதலிடம் பிடிப்பவர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை