உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு பஸ் கண்டக்டர், டிரைவர் ஆக திருநங்கையருக்கு கலெக்டர் பரிந்துரை

அரசு பஸ் கண்டக்டர், டிரைவர் ஆக திருநங்கையருக்கு கலெக்டர் பரிந்துரை

கோவை: ஆர்.எஸ்.புரம் சித்திவிநாயகர் கோயில் வீதியில் உள்ளது , 'மை சொசைட்டி டிரஸ்ட்'. இதன் நிர்வாகியாக இருப்பவர் திருநங்கை சுபிக் ஷா, இந்த சொசைட்டியில், 200 பேர் உறுப்பினராக இருந்து சமூகப்பணிகளை செய்து வருகின்றனர். கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த சுபிக் ஷா, வினோதினி உடன் நேற்ற முன் தினம் கலெக்டர் பவன்குமாரிடம் கொடுத்த மனு: நாங்கள் திருநங்கையாக இருந்து கொண்டு, சமூகத்திற்கு பல்வேறு சமூகப் பணிகளை செய்து வருகிறோம். எங்களுக்கும் சமூகத்தில் அந்தஸ்து வேண்டும். அனைவரைப்போல நாங்களும் அனைத்துத்துறையிலும் சிறந்து விளங்க வேண்டும். அதற்கு தேவையான கல்வி வலிமை, திறமை, டிரைவர் மற்றும் கண்டக்டர் லைசென்ஸ் உள்ளது. அதனடிப்படையில் எங்களுக்கு அரசு போக்குவரத்துக்கழகத்தில் தற்காலிக டிரைவர், கண்டக்டர் பணி வழங்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர். இம்மனுவை, கலெக்டர் பவன்குமார், அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனருக்கு பரிந்துரை செய்து அனுப்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !