கேரம் போட்டியில் அசத்திய கல்லுாரி மாணவ, மாணவியர்
கோவை; மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி, ஆக. 26 முதல் நடந்து வருகிறது. கல்லுாரி மாணவ, மாணவியருக்கான கேரம் போட்டி எஸ்.என்.ஆர். கல்லுாரியில் நடந்தது. மாணவியருக்கான இரட்டையர் பிரிவில், 21 அணிகள் பங்கேற்றன. நிறைவில், டாக்டர் என்.ஜி.பி. கல்லுாரி முதலிடம், ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி இரண்டு மற்றும் மூன்றாம் இடங்கள் பிடித்தன. மாணவர்களுக்கான பிரிவில், இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி முதலிடம், ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி இரண்டாமிடம், கே.எஸ்.ஜி. கல்லுாரி மூன்றாமிடம் பிடித்தன. மாணவியருக்கான ஒற்றையர் பிரிவில், என்.ஜி.பி. மாணவி சுனித்ரா முதலிடத்தையும், அதே கல்லுாரியை சேர்ந்த சுபர்ணா இரண்டாம் இடத்தையும், பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லுாரி மாணவி காவேரி மூன்றாம் இடத்தையும் வென்றனர். மாணவர்களுக்கான ஒற்றையர் பிரிவில், இந்துஸ்தான் கல்லுாரி மாணவர் அக் ஷய் குமார், கே.சி.டி. மனுராஜ், ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி பவீஷ் ஆகியோர், முதல் மூன்று இடங்களை தட்டிச் சென்றனர்.