மேலும் செய்திகள்
துணை கமிஷனர் பொறுப்பேற்பு
06-Mar-2025
கோவை : மாநகரில் நடந்த பல்வேறு குற்றச்சம்பவங்களில், திறமையாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த போலீசாருக்கு, போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் பாராட்டு தெரிவித்தார். கோவை மாநகர போலீசாருக்கான மாதாந்திர குற்ற சீராய்வு கூட்டம், நேற்று முன்தினம் போலீஸ் கமிஷனர் தலைமையில் நடந்தது. இதில், பிப்., மாதம் நடந்த 5 கொலை முயற்சி வழக்குகளில் குற்றவாளிகளுக்கு, தண்டனை பெற்று தந்த அரசு கூடுதல் வக்கீல் கிருஷ்ணமூர்த்தியை, கமிஷனர் பாராட்டி, சான்றிதழ் வழங்கினார். சைபர் கிரைம் பிரிவில் சிறப்பாக பணியாற்றிய செல்வராஜ், டேவிட் தேவாரம் மற்றும் பல்வேறு ஸ்டேஷன்களில் சிறப்பாக பனியாற்றிய எஸ்.ஐ.,க்கள், போலீசார், தனிப்படை போலீசார் உள்ளிட்டோரை, கமிஷனர் நேரில் அழைத்து பாராட்டினார். அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை அளிக்கப்பட்டது.
06-Mar-2025